சென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

136

ஆந்திராவை சேர்ந்த வம்சி என்ற மாணவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர், நேற்று விடுதி அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர் வம்சி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of