தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர்..! உடற்கூராய்வில் தாமதம்

375

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், நேற்று நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக மருத்துவரணி செயலாளர் ஆனந்தனின் உடலை, உடற்கூராய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்லில் திமுக பிரமுகர் டாக்டர் ஆனந்த் நேற்று மாலை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இறந்த ஆனந்தனின் உடல், உடற்கூராய்வு செய்வதற்காக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறை முன் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் உயிரிழந்த ஆனந்தனின் தாயார் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு தான் உடற்கூராய்வு செய்யப்படும் என அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை முன் உறவினர்கள், திமுக பிரமுகர்கள் என பலர் கூடியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of