சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!

513

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் 2 வயதான குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

சுமார் 27 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க மீட்பு படையீனர் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ஆரம்பமுதலே தடங்கள் மட்டுமே இருந்தது.

27 அடியில் இருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்கு சென்றவுடன் குழந்தையை மீட்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 4 நாட்களாக கடும் போராட்டத்திற்கு பிறகு குழந்தை சுஜித் அதிகாலை 4.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டான்.

ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of