சுஜித் சம்பவம்..! இரண்டாவது முறையா..? தொடரும் துயரம்..!

1363

திருச்சி மாவட்டம் மண்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பாட்டி பகுதியில், ஆழ்துளைக்கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் விழுந்தது, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, சிறுவன் சுஜித் சடலமாக மீட்கப்பட்டான்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் சோகத்தில் மூழ்கினர். பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சுஜித் குடும்பத்தில், கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஏற்கனவே ஒரு முறை நடந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதன்படி, சுஜித்தின் மாமா ஜான் பீட்டர் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர். விடுமுறைக்காக நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து, தங்கியுள்ளார்.

அப்போது, கோழி ஒன்று தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்துள்ளது. கோழியை காப்பாற்றுவதற்காக, கிணற்றுக்குள் ஜான் கயிறு ஒன்றை பயன்படுத்தி கீழே இறங்கியுள்ளார்.

கோழியை மீட்டு மீண்டும் மேலே வரும் போது, கயிறு அறுந்துள்ளது. இதனால் கீழே விழுந்த அவர், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு, அந்த கிணற்றை வேலி போட்டு மூடிய குடும்பத்தினர், யாரையும் அந்த கிணற்றுப் பக்கம் போக விடாமல் தடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.