அழக்கூட தெம்பில்லை.. உயிரிழந்த குழந்தையை பார்த்து கதறும் தாய்.. நெஞ்சை உறைய வைக்கும் நிகழ்வு..!

938

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் 2 வயதான குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

சுமார் 27 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க மீட்பு படையீனர் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ஆரம்பமுதலே தடங்கள் மட்டுமே இருந்தது.

27 அடியில் இருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்கு சென்றவுடன் குழந்தையை மீட்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 4 நாட்களாக கடும் போராட்டத்திற்கு பிறகு குழந்தை சுஜித் அதிகாலை 4.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டான்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து தனது குழந்தையின் பிரிவை எண்ணி கதறி அழுது அழுது தற்போது குழந்தை இறந்துவிட்டதை பார்த்து சுஜித்தின் தாய் கலாமேரியால் அழகூட தெம்பில்லாமல் கதறி துடிப்பது அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of