குழாய் பொருத்திய மண் பானைகள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

170
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
அதன் காரணமாக வெள்ளரிக்காய், இளநீர், கரும்புசாறு மற்றும் பழச்சாறு போன்றவற்றின் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மண்பானை விற்பனையும் களை கட்டத் தொடங்கியுள்ளது.
தற்போது விற்பனைக்கு வரும் மண்பானைகளில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில்அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இதுகுறித்து மண்பானை விற்பனையாளர் கூறுகையில் வழக்கத்தைவிட 40 சதவீத விற்பனை அதிகரித்துள்ளதாகவும்.
அளவைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 300  ரூபாய் விற்கப்படுவதாக  குறிப்பிட்டார்கள்.