தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..

1319

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிறகு, பாலிவுட் சினிமாவில் போதைப்பொருள் புழக்கம் இருப்பது பகிரங்கமாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராஹினி திவேதி கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில், பல்வேறு முக்கிய சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகிய 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதில், அடுத்த 3 நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவல் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.