சுந்தர் பிச்சை ஓட்டு போட்டாரா? இல்லையா! வெளியான ருசிகர தகவல்!

578

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியாவில் நடந்த இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டளிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் அந்த புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு காரக்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சுந்தர் பிச்சை எடுத்துக் கொண்டது தான் என்றும், அப்போது 3,000 மாணவர்களுடன் சுந்தர் பிச்சை கலந்துரையாடியது போது எடுத்துக் கொண்டது என தகவல் வெளியானது.

மதுரை மாவட்டத்தில் பிறந்த சுந்தர் பிச்சை அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் ஆவார். இவரால் இந்திய நாட்டின் ஓட்டுரிமை விதிகளின் படி இந்தியாவில் வாக்கு செலுத்தமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of