புது பதவி – 14 கோடி சம்பளம் – அசத்தும் “கூகுள் சுந்தர்” | Sundar Pitchai

669

சுந்தர் பிச்சை, தமிழரான இவர் பல ஆண்டுகளாக பிரபல கூகுள் நிறுவனத்திடம் பணியாற்றி வருகின்றார். தற்போது வரை சுந்தர் பிச்சை தான் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ஆனால் இப்பொது இவர் கூகுளின் தாய் நிறுவனமான “அல்பாபெட்” (Alphabet) என்ற நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பதவியோடு புதிய ஊதிய உயர்வும் பெற்றுள்ளார் சுந்தர் பிச்சை, இதன்படி 2020 ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் பெற இருக்கிறார் அவர். இது வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இத்துடன் சுமார் 1700 கோடி ரூபாயினை பங்கு தொகையாக பெற இருக்கிறார். பங்கு தொகை என்பது கூகுள் நிறுவனத்தின் பங்குகளை நிறுவன ஊழியர் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு வாங்கிக் கொள்வது ஆகும்.