தமிழகம் முழுதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

392

தமிழகம் முழுவதும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இந்த விஷயம் குறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று மொத்தம் 43,051 மையங்களில் தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 70 லட்சம் குழந்தைகளுக்கு இந்த போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. 5 வயதிற்கு உள்ளே உள்ள எல்லா குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.