தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்கும் – பயமுறுத்தும் வானிலை ஆய்வு மையம்

396

தமிழகத்தில் இரு தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில், இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நேற்று கரூர், மதுரை, சேலம், திருத்தணி உள்ளிட்ட 10 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானதாக வானிலைய ஆய்வு மையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of