“புதுசு கண்ணா புதுசு!” சன்னி செய்த சர்ச்சை செயல்! பொங்கி வரும் மக்கள்!

506

பிரபல நடிகரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமானவர் சன்னி தியோல். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் பகுதியின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது செய்துள்ள விஷயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது என்னவென்றால், சன்னி தியோல் தனக்கு பதிலாக ஒரு பிரதிநிதியை உருவாக்கியுள்ளார்.

இவர் ஊரில் இல்லாத போது, ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் முக்கிய விஷயங்களை ஃபாலோ செய்வது, அந்த பிரதிநிதியின் வேலையாம். எழுத்தாளரான, குர்பிரீத் சிங் பால்ஹேரி என்பவர் தான், தியோலை பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த முக்கிய புள்ளி.

சன்னி தியோலின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. மக்களுக்கு 24 மணி நேரமும் சேவை செய்ய வேண்டும் என்றோ இவ்வாறு என்னை நியமித்துள்ளனர் என்று பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் விளக்கம் அளித்துள்ளார்.

எம்.பி பதவிக்கு இதுவரை யாரும் பிரதிநிதி ஒருவரை வைத்திருக்காத நிலையில், இவர் இவ்வாறு புதுசாக செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்க்கும் போது, மாப்பிள்ளை இவரு தான். ஆனா இவரு போட்டிருக்க ட்ரெஸ் என்னுடையது என்னும் பிரபல வசனம் தான் நினைவுக்கு வருகிறது.