பா.ஜ.க -வில் இணைந்தார் சன்னி தியோல், களமிறங்கும் அடுத்த திரை நட்சத்திரம்

465

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன் சன்னி தியோல். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.

தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க.வில் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, சன்னி தியோல் பா.ஜ.க. தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இன்று இணைந்தார்.

இந்நிலையில், இன்று இரவு பாஜக சார்பில் பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

இதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், ஹொசைர்பூர் தொகுதியில் சாம் பிரகாஷும், சண்டிகரில் கிரண் கெர் ஆகியோரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of