சீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்

537

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் நடித்த படம் சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாவது இது முதன்முறையாகும். சீன மொழியில் ஒரே நேரத்தில் 50ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதால் இந்தியாவில் வசூல் சாதனை படைத்தது போல அங்கும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது சீனாவில் வெளியிட இருந்த நிறுவனம் தற்போது பின்வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2.0, வெளியாகும் சமயத்தில் தி லயன் கிங் படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதால், 2.0 வெளியீட்டை விநியோக நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.