“ராசிக்கார இயக்குநரா இருக்காரே..” அடுத்து இவர் இயக்க இருக்கும் ஜாம்பவான் யார் தெரியுமா..? தீயாய் பரவும் செய்தி..!

1850

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் பிரபலம் அடைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தன்வசம் இழுத்தார்.

யார் இந்த பையன்.. நல்ல எடுக்கிறானே என்று கோலிவுட் வட்டாரங்களே சற்று ஆச்சரியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க, அடுத்ததாக ரஜினியின் அடுத்த படத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் கமலிடம் லோகேஷ் கனகராஜ் கதை சொல்ல சென்றதாகவும், கதையை கேட்ட கமல், கதை நன்றாக இருக்கிறது.

இந்த கதையில் ரஜினி நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும். எனவே அவரிடம் கதையை சொல்லுங்கள் என்று கூறினாராம்.

இந்த கதையை கேட்ட ரஜினியும் ஓகே சொல்லிவிட்டாராம். மேலும், இந்த திரைப்படத்தை கமல் தன், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜூன் மாதம் வெளியாகலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of