மிக்க நன்றி Bear Grylls சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட ட்வீட்

353

Man vs Wild, இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவது மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி, யாரும் இல்லாத வனப்பகுதி, கடல், மலை என்று எந்த இடமாக இருந்தாலும் மக்கள் தன்னை காத்துகொண்டு உதவி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவது எப்படி என்பதை கற்றுத்தரும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியே இந்த Man vs Wild.

இதன் தொகுப்பாளர் Bear Grylls தனியாக தொலைந்துபோன தனி மனிதனின் கதாபாத்திரத்தை ஏற்று எப்படி கடினமான சூழ்நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ளுவது என்பதை செய்துகாட்டுவார்.

இவர் முன்னாள் ராணுவ வீரர், பல வித தற்காப்பு பறிச்சியில் ஈடுபட்டுள்ளார். Bear Grylls ஆரம்ப காலகட்டத்தில் இந்திய ராணுவத்தில் இணைய வேண்டும் என்று ஒரு ஆசை இருந்ததாக ஒருமுறை அவரை கூறியிருந்தார். அண்மையில் இவருடன் அந்த நிகழ்ச்சில் இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் கலந்துகொண்டார்.

rajini-twitter

இந்நிலையில், இந்த முறை Man vs Wild நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இணைந்துள்ளார், இதற்கான படப்பிடிப்பு பண்டிபூர் புலிகள் சரணாலயத்தில் நடந்து முடித்து. படப்பிடிப்பின்போது ரஜினிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது, ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் தனக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

Rajinikanth

Advertisement