சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய ரவை பாக்கெட்டுகளில் புழுக்கள்

703

ஈரோடு அருகே சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய ரவை பாக்கெட்டுகளில் புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூரை சேர்ந்தவர் சந்திரன். இவர் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் வாங்கிச் சென்ற மளிகைப் பொருட்களில் இருந்து ரவை பாக்கெட்டை சந்திரனின் மனைவி நேற்று பிரித்துள்ளார். அப்போது அதில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து சந்திரன் பொருட்கள் வாங்கிய ரசீதுடன், ரவை பாக்கெட்டை மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கு எடுத்து சென்றுள்ளார்.

அதனை வாங்கிக் கொண்ட சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், மற்றொரு ரவை பாக்கெட்டை கொடுத்துள்ளனர்.

ஆனால் அதனை வாங்க மறுத்த சந்திரன் பாக்கெட்டை திறந்து காட்டுமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஊழியர்கள் ரவை பாக்கெட்டை திறந்த போது, அதிலும் புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்துள்ளது.

Advertisement