ரஜினியின் புதுப்பட பெயர் “பேட்ட”

680

சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு பெயர் பேட்ட என்று வைத்துள்ளனர். மேலும் படத்தலைப்பு தொடர்பான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.