சூப்பர்ஸ்டாருக்கு பிடித்துப்போன ஸ்டண்ட் மாஸ்டர்..

120
stunt-master

சமீபகாலமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போதிய இடைவெளியில் படங்கள் நடித்துவருகிறார்.

அண்மையில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்த கார்த்திக்சுப்புராஜின் பேட்டையின் ஆர்வம் குறைவதற்குள்ளே சூப்பர்ஸ்டாரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது சிலநாட்களுக்கு முன் வெளிவந்த ஒளிப்பதிவாளர் திரு. சந்தோஷ் சிவன் அவர்களின் twitter பதிவு.

அந்த பதிவில் 1991ம் ஆண்டு தளபதி படத்திற்கு பின் மீண்டும் 2019ம் ஆண்டு சூப்பர்ஸ்டாருடன் இணைகின்றேன் என்றும், திரு. A.R.முருகதாஸ் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் இணைகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின். சிவாஜி, எந்திரன், கோச்சடையான் போன்ற படங்களில் சூப்பர்ஸ்டாருடன் இணைத்து பணியாற்றிய நிலையில் மீண்டும் இந்த திரைப்படத்திலும் சண்டைக்காட்சிகளை இயக்கவுள்ளார் பீட்டர் ஹெயின்.

மேலும் பீட்டர் ஹெயின் ஸ்டண்ட் இயக்குனராக வந்தால் நன்றாக இருக்கும் என்று திரு. ரஜினி அவர்களே விரும்பியதாகவும் சினிமாவட்டாரத்தில் கூறப்படுகிறது.