ப.சிதம்பரம் வழக்கால் மல்லையா, நீரவ்மோடி வழக்குகள் பாதிக்கப்படும்

392

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கினால், நீரவ்மோடி, விஜய்மல்லையா ஆகியோரின் வழக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமின்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் நடைபெற்றுவருகிறது. அமலாக்கத்துறை சார்பாக இன்று வழக்கறிஞர் துஷார் மேத்தா, இறுதிக்கட்ட வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இந்த வாதத்தின்போது, ப,சிதம்பரம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.  இந்த வழக்கில், அவருக்கு ஜாமின் வழங்கினால், நீரவ்மோடி, விஜய்மல்லையா உள்ளிட்டோரின் வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் வழக்கில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்தான் செல்வாக்கை பயன்படுத்துகிறார் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். கைது செய்யவில்லை என்றால் ப.சிதம்பரத்திடம் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று தெரிவித்த அவர், ஜாமின் வழங்கக்கூடாது என்றும் கோரினார். அமலாக்கத்துறை வாதங்கள் நிறைவடைந்தபிறகு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை இன்று பிறப்பிக்கிறது.

Advertisement