திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

திருவாரூர் தொகுதிக்கு வரும்  28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று  தொடங்கியது. 10-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா மற்றும் மாரிமுத்து என்பவர் தனித்தனியே மனு தாக்கல்  செய்திருந்தனர். கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வருவதால் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.இந்த வழக்கு  விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement