இந்த வகை வாகனங்களை பதிவு செய்ய தடை – உச்சநீதிமன்றம்

613

சுற்றுச்சூழல் மாசு- அதிக புகை வெளியேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவற்காக பாரத் ஸ்டேஜ் – 4 என்று வகைப்படுத்தப்பட்ட பி.எஸ்.- 4 வாகனங்களை ஏப்ரல் மாதம் ஒன்றாம்தேதிக்குப்பிறகு உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகனவிற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

ஒருலட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கிய நிலையில், இரண்டரைலட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் பி.எஸ் – 4 ரக வாகன விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண்மிஸ்ரா, வாகனவிற்பனையில் மோசடி நடைபெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.

இதனால், மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.-4 ரக வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.