ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், 377வது சட்டப்பிரிவை ரத்து செய்து உத்தரவு

492

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதற்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில், 1861ல் சட்டம் இயற்றப்பட்டது.

அதன்படி, இந்திய குற்றவியல் சட்டத்தின், 377வது பிரிவின் கீழ், இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது குற்றமாகும். இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்தச் சட்டப் பிரிவு சட்டவிரோதமானது என்று கடந்த 2009ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, 2013ஆம், உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

வழக்கு விசாரணை ஜூலை மாதம் 17ஆம் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படுகிறது.

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம் என கூறும் 377வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு இந்திய குற்றவியல் சட்டத்தின் 377வது பிரிவு இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றம் என்கிறது மற்றவர்களுக்கு உள்ள அடிப்படைஉரிமை ஓரினச்சேர்க்கை சமூகத்தினருக்கும் உள்ளது.

Advertisement