உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்க ”6 மொழிகள்” – தமிழ் மொழியை நிராகரித்தது..!

955

இந்தியாவில் உள்ள 6 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை  மொழிபெயர்ப்பு செய்து இணையத்தில் வெளியிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த 6 மொழிகளில் செம்மொழியான தமிழ் இல்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட ஆங்கிலம் அறியாதவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மாநில மொழிகளான இந்தி, கன்னடம், தெலுங்கு, ஒடியா அச்சாமி, மராட்டியம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் செம்மொழியான தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுக்கத் தொடங்கியுள்ளது.

அந்த 6 மாநில மொழிகளை போன்று தமிழிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of