மத்திய அரசு அதிகாரிகளின் ஊழலை விசாரிக்க முன்னாள் நீதிபதி நியமனம்

242

இந்தியாவின் முதல் லோக்பால் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஊழலை விசாரிக்க மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும், மத்தியில் லோக்பால் அமைப்பும் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோசை நியமிப்பது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம், இந்திரஜித் பிரசாத் கவுதம் மற்றும் திலீப் பி.போஸலே, பிரதீப்குமார் மொகந்தி, அபிலஷா குமாரி, அஜய்குமார் திரிபாதி, தினேஷ்குமார் ஜெயின், மகேந்திர சிங் ஆகிய 8 பேரும் லோக்பால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.