தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பென்ஷனை உயர்த்தி வழங்க உத்தரவு

506

தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என் கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதிகபட்ச ரூ.15 ஆயிரம் பென்ஷனில் தனது பங்கை 8.33% உயர்த்தி வருங்கால வைப்புநிதி அலுவலகம் சட்டதிருத்தம் கொண்டு வந்தது.

கடந்த 5 ஆண்டுகள் சம்பளத்திலிருந்து கணக்கிட்டு பென்ஷன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இத்தகைய முடிவால் ஏராளமான ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை குறைந்தது. இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகள் சம்பளத்தை கணக்கிட்டு பென்ஷன் வழங்கும் உத்தரவை ரத்து செய்து பழைய முறைப்படி ஓராண்டு சம்பளத்திலிருந்து கணக்கிட்டு பென்ஷன் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது.

அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு பழைய உத்தரவை அமல்படுத்த வருங்கால வைப்புநிதி அலுவலகம் மறுத்தது. இந்நிலையில் அப்பீல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் முழு சம்பளத்திலிருந்து பென்ஷனை கணக்கிட உத்தரவிட்டது.

தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் பென்ஷன் வழங்கவேண்டும் என் கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் . அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வருங்கால வைப்புநிதி அலுவலகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of