8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

95

சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே உள்ள சாலை போக்குவரத்தை மேம்படுத்த அதிவிரைவு சாலைகள் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டன.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த 8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில், ஆயிரத்து 900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதற்காக எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை பசுமைதிட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலியிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை நாளைக்காவது விசாரிக்குமாறு சாலை திட்ட மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு எப்போது பட்டியல் இடபடுகிறதோ அப்போது தான் விசாரிக்கபடும் என கூறியுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of