டிக்டாக் செயலிக்கு தடை.., சுப்ரீம் கோர்ட் மறுப்பு

414

‘டிக்டாக்’ செயலியில் ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியாவதால் அந்த செயலிக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த செயலியின் சீன நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ்கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சீன நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, கோடிக்கணக்கான செல்போன் செயலிகள் உள்ளன. ஐகோர்ட்டு அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்காமலும், அதன் கருத்தை கேட்காமலும் உத்தரவை பிறப்பித்துள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கை விசாரித்துவரும் ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு தான் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்கட்டும் என்று கூறி விசாரணையை 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மதுரை ஐகோர்ட்டு கிளையில் இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of