திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம்

407

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் மாரிமுத்து, ரத்தினகுமார் ஆகியோர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மூன்று மனுக்களும் விசாரணக்கு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.