“இனி சத்தியமா நான் அப்படி பேச மாட்டேன்”! உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல்!

768

ரபேல் விமான பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மீண்டும் ரபேல் வழக்கை விசாரிக்கப் போவதாக அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் தொடர்புபடுத்தி பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி கூறுவதை கண்டிக்க வேண்டும் என கூறியது.

இதையடுத்து உச்சநீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கததில் ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு வேகத்தில் ரபேல் விவகாரம் குறித்து அவ்வாறு பேசிவிட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், இனி அவ்வாறு பிரச்சாரத்தில் பேச மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of