தாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் இல்லை; மாநில அரசுகள் தங்களை பார்த்து பயப்பட வேண்டாம்

509
Supreme-court

ஆந்திராவில் தனியார் நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சுரங்க தொழிலை நிறுத்தி வைக்குமாறு தனியார் நிறுவனத்திற்கு ஆந்திர அரசு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் மாநில அரசு பயந்துவிட்டதாகவும், இதனால் தங்களது நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தனியார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள் தாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் இல்லை என்பதால், மாநில அரசுகள் தங்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தது.