குற்ற பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடலாம்

816

குற்ற பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிரிமினல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் நிரந்தர தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, 2014ஆம் ஆண்டு முதல் ஆயிரத்து 581 குற்ற வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ளன.

கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.

அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கிரிமினல் குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டதா? சம்மந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு குற்றவாளிகள் சார்ந்த அனைத்து வழக்குகளும் மாற்றப்பட்டதா என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்ற பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்றும், குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை கட்சிகளே நிராகரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of