CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்..! ரைனாவின் அசத்தல் டுவீட்..!

1106

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பினார். உறவினர் இருவர் படுகொலையானதால் ஊர் திரும்பியதாக அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதனிடையே, சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், சுரேஷ் ரெய்னா குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது. இதுமட்டுமின்றி, கேப்டன் டோனியுடன் கருத்துவேறுபாடு என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த வதந்திகளுக்கு தற்போது, சுரேஷ் ரெய்னா முற்றுப்புள்ள வைத்துள்ளார். அதாவது, ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சீனிவாசன் தெரிவித்த கருத்துகளை தந்தை கூறியதை போல எடுத்துக்கொள்கிறேன் என்றும், தோனியுடன் எந்த மோதலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், விரைவில் அணிக்கு திரும்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்று ரெய்னா கூறியது, அவரது ரசிகர்களுக்கும், சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.