“ஐயயோ ரெய்னாவுக்கு என்னாச்சு..?” சோகத்தில் ரசிகர்கள்..!

621

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இடது கை பேட்ஸ்மேனான இவரை, குட்டி தல என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல், உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

நீண்ட நாட்களாக முழங்கால் பிரச்சனையில் தவித்து வந்த சுரேஷ் ரெய்னாவுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

4 முதல் 6 வாரங்கள் ஒய்வில் இருக்க வேண்டும் என்றும் ரெய்னாவுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். ரெய்னாவுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of