எந்த நாட்டிலும் இல்லாத புதிய முயற்சியே “சர்ஜிகல் ஸ்டிரைக்”

320

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக இன்று ராஜஸ்தான் மாநிலம் சுரட்கர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

நாட்டில் இருந்து வறுமையை விரட்டியடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம். இதன்மூலம் நாட்டில் எந்த ஒரு குடிமகனும் வறுமை நிலையில் இருக்கமாட்டார்கள். எந்த நாடும் இதுபோன்ற முயற்சியை எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பணக்காரர்களுக்கு பணத்தை அள்ளி வழங்குகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு மட்டுமே பணத்தை தரும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வந்த 14 கோடி மக்களை மீட்டுள்ளோம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வரும் மக்களின் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்துள்ளது அவமானமாக உள்ளது.

நாங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை மீட்டோம். ஆனால் அவர்களை பாஜக அரசு மீண்டும் வறுகைக்கோட்டுக்கு கீழே கொண்டு வந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of