சூர்யா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ! உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள்!

370

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஹஎன்ஜிகே படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.

அதன்படி படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்துள்ளார்கள். சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of