ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..!

664

ஒவ்வொரு வருடமும் சிறந்த சினிமா படைப்புகளுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படும் இது, பல கலைஞர்களின் கனவாகவும் உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்குதில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, பெருந்தொற்று பரவல் காரணமாக, நிறைய படங்கள் ஒடிடியில் வெளியாகியிருப்பதால், இந்த முறை ஒடிடியில் வெளியான திரைப்படங்களுக்கும், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ் திரைப்படமான சூரறைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் இந்த திரைப்படம் போட்டியிட உள்ளது.

Advertisement