ஆசிரியருக்கு மாணவர்கள் கொடுத்த பரிசு! கண்ணீர் மல்கும் உண்மை பின்னணி

499

மதுரை கோட்டக்குடி சி.எஸ்.ஐ நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் வேதமுத்து. இவர் பணி நிறைவின்போது ஒட்டு மொத்த மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நெஞ்சை கரைய வைக்கிறது. 1996 ஆம் ஆண்டு முதல் 2019 வரை ஆசிரியராக பணியாற்றினார் வேதமுத்து.

பணியின் போது மாணவச்செல்வங்களிடம் மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும், அவர்களது படிப்பில் அதிக ஆர்வமும் செலுத்தி வந்தார். மாணவ செல்வங்கள் அவரை மிகவும் விரும்பினார். அதையும் தாண்டி மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் பெற்றோர்களிடம் அறிவுரை கூறி, அந்த ஊருக்கே சிறந்த ஆசிரியராக திகழ்ந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவருக்கு பணி நிறைவு என்பதால் இதனை அறிந்து கொண்ட மாணவர்கள் கதறி அழத்தொடங்கினர். தலைமை ஆசிரியர் வேதமுத்துவை ஒருநாளும் மிஸ் பண்ண முடியாது என கண்ணீர் மல்க கூறுகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு மிக சிறந்த ஆசிரியராக இருந்து வந்த வேதமுத்துவை சிறப்பிக்கும் வண்ணம் பணி நிறைவின் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து அவருக்கு விழா எடுத்துள்ளனர்.

இவ்விழாவின்போது புல்லட் பைக் அன்பு பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு தலைமை ஆசிரியர் வேதமுத்து மாணவர்களுக்கு மரச் செடிகளை அன்பு பரிசாக கொடுத்தார். மாணவர்கள் மட்டுமின்றி ஊர் மக்களே இவரை பாராட்டியதோடு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

அவர்மீது கொண்ட அன்பு காரணமாக அவருக்கு பரிசளித்த புல்லட் வண்டியிலேயே அவரை அமர வைத்து, அவர் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர். மாணவர்களின் இந்த சம்பவம் அந்த கிராமம் மட்டுமின்றி மதுரை முழுவதும் பரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of