சுருளி அருவியில் குளிக்கத்தடை

342
suruli falls

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில்,மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை கருதி சுருளி அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.