“ஜோ” -வை மிஞ்சிய சூர்யா..! – அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கிளம்பிய புயல்..!

681

10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்? என நடிகர் சூர்யா கேள்வியெழுப்பியுள்ளார்.

ஸ்ரீ சிவக்குமார் கல்வி தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தார்.

மேலும் 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதேபோன்று நடிகை ஜோதிகா நிகழ்ச்சி ஒன்றில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவின் பேச்சால் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.