EIA 2020-க்கு எதிர்ப்பு.. கார்த்தியை தொடர்ந்து சூர்யா அதிரடி..!

535

சுற்றுச்சூழல் தாக்க வரைவில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகர் கார்த்திக், மக்களின் கருத்துகளை கேட்காமல் பெருநிறுவனங்களின் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும், இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைப்பு வளர்ச்சி அல்ல என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. என்று பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் தாக்க வரைவு பற்றி  நேற்று கார்த்தி வெளியிட்ட நீண்டதொரு அறிக்கையையும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement