சூர்யாவின் அடுத்த படம் இதுவா! மீண்டும் இவர்களின் கூட்டனியா!!

137
actor-surya

‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’,’துருவ நட்சத்திரம்’ ஆகியவற்றில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன், அடுத்து பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படத்தை இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் பரவின. இச்செய்தியை கவுதம் மறுக்கவில்லை எனினும் தயாரிப்பாளர்களிடம் ‘நோ’ சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதிலும் சூர்யா – ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கதை சரியாக 6 வருடங்கள் கழித்து நடப்பதாகவே அமைக்கப்பட இருப்பதால் அவர்களது வயது குறித்த பிரச்சினைகள் எதுவும் வராது என்றும் தெரிகிறது.

பார்ட் 2வுக்கு மீண்டும் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2016ம் ஆண்டில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்குப் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக கவுதம் வாசுதேவ மேனனுக்கு ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.