பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம்

487

பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் உலகிற்கு பெரும் சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இருந்த பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும், அவர்களை சுந்திரமாக நடமாடவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பதன்கோட் தாக்குதல் விவகாரத்தில் தங்களை ஏமாற்றிய பாகிஸ்தான், பயங்கரவாத ஒழிப்பில் இரட்டைவேடம் போடுவதாக சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார்.

தற்போதைய பிரதமர் இம்ரான்கான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும், ஆனால் பயங்கரவாதத்தை ஒடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

எனவே பயங்கரவாத செயல்களுக்கு மத்தியில் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of