அரசு போக்குவரத்து பேருந்துகளை போன் பேசியபடி இயக்கிய 50 ஓட்டுனர்கள் சஸ்பெண்ட்

115
MTC-bus

சென்னையில் மாநகர பேருந்துகளை ஓட்டும் சில டிரைவர்கள் பரபரப்பான சாலை போக்குவரத்துக்கு இடையில் பேருந்தை இயக்கியபடி செல்போனில் பேசிக் கொண்டு செல்வதுண்டு. இதனால் விபத்துகள் ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பரவலாக புகார்களும் வந்தன. இந்த புகார்கள் மீது விசாரணை நடத்திய உயரதிகாரிகள் 50 டிரைவர்களை இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து, இதே தவறை செய்யும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here