தரையில் அமர்ந்து தர்ணா..! சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியையால் பரபரப்பு..!

2228

திண்டுக்கல் மாவட்டத்தில்  சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அறையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி இட மாறுதல் குறித்த கலந்தாய்வு கடந்த இரு தினங்களுக்கு முன்பு  நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்ற குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா என்பவர் தனக்கு அருகிலுள்ள பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் வேண்டும் என கோரிக்கை விடுத்து தரையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  மகளிர் போலீசார் தலைமை ஆசிரியை இந்திராவிடம் சமரச பேச்சுவார்த்தை  நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of