கோபத்தில் கணவனைத் துப்பாக்கியால் சுட்ட போலீஸ் மனைவி

90

சத்தீஸ்கரில் ஆர்பிஎப்பில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் சுனிதா மிஞ்ச் (39). அவரின் கணவர் தீபக் ஸ்ரீவத்சவா (42) ரயில்வே ஊழியர். இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய மனைவி சுனிதாவுக்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாக  தீபக் சந்தேகித்துள்ளார்.இதையடுத்து அவர் சுனிதாவிடம் சண்டை போட்டுள்ளார். தொடர்ந்து பல நாட்கள் இதுதொடர்பாக இருவருக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பதபாரா ரயில்வே நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, சுனிதா பணியில் இருந்தபோது திடீரென அங்கு சுனில் வந்தார். மீண்டும் மனைவியின் நடத்தை குறித்துப் பேசினார்.இதனால் கடும் கோபமடைந்த சுனிதா, தன்னிடமிருந்த ரிவால்வரால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டார். உடனே கணவரை நோக்கியும் இரண்டு முறை சுட்டார்.

இதில் தீபக்கின் இடுப்புப் பகுதியில் புல்லட் துளைத்தது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீபக். அபாய கட்டத்தில் இருந்து அவர் தப்பிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினர் சுனிதாவைக் கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.