இந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது

126

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் ‘எல்லைகளில்லாத பத்திரிகை நிருபர்கள்’ என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் பிரிட்டன் கிளை சார்பில் பத்திரிகை சுதந்திரத்துக்காக வீரதீரத்துடன் பணியாற்றும் நபர்களுக்கு விருதுகள் அளிக்க கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

Swati Chaturvedi

அதன்படி, இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக தெரிவிக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கு எதிர் விமர்சனம் தெரிவிப்பதற்காக இணையதளங்களில் நடைபெறும் ‘டுரோல்’ பிரசாரம் தொடர்பாக தைரியமாக தனது ‘I am a Troll: Inside the Secret World of the Bharatiya Janata Party’s Digital Army’ என்னும் நூலில் எழுதியதற்காக சுவாதி சதுர்வேதி இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். லண்டன் நகரில் உள்ள கெட்டி இமேஜஸ் அலுவலக கருத்தரங்கில் நேற்று நடந்த விழாவில் சுவாதிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here