உங்களுக்கு என்னவெல்லாம் தேவை? – இதோ வந்துவிட்டது SWIGGY-ன் அதிரடி சேவை..!

797

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி புதிதாக ஸ்விகி கோ என்ற சேவை ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.


பிரபலமான ஸ்விகி நிறுவனம் உணவு டெலிவரியைத் தாண்டி பயனாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சிறுசிறு வேலைகளையும் செய்து கொடுக்கும் வகையில் ஸ்விகி கோ என்ற ஆப்பை அறிமுகம் செய்ய உள்ளது.

இதன்மூலம் பயனாளர்கள் தங்களுடைய நகருக்குள் பார்சல் அனுப்புதல், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்திற்கு சாப்பாடு கொடுத்து விடுதல், அயர்ன் கடையில் துணி கொடுத்தல் போன்ற அனைத்து வகையான வேலைகளுக்கும் ஸ்விகியின் சேவையைப் பெற முடியும்.

பிக் அப் மற்றும் ட்ராப் சேவை எனக் கூறப்படும் ஸ்விகி கோ பெங்களூர் நகரில் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்னர் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் இந்த சேவை நாடு முழுவதும் உள்ள 300 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும் ஸ்விகி ஸ்டோர்ஸ் மூலம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், மருந்து, பூ போன்றவையும் கிடைக்கும் வகையில் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of