Swiggy ஊழியர்களின் ஊதியப் பிரச்சனை தீருமா?

230

ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியப் பிரச்சனைக்கு முதலமைச்சர் பழனிசாமி தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர் காலத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெற்ற ஸ்விக்கி ஊழியர், தற்போது 6 ஆயிரம் ரூபாய் கூடப் பெற முடியாமல் தவிப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

மக்களின் வயிற்றுப் பசியாற்றும் ஊழியர்களின் போராட்டத்தை ஸ்விக்கி நிறுவனமும், அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்சனை குறித்து, இனியும் அலட்சியப் படுத்தாமல், முதலமைச்சர் நேரில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.