சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெல்டா மாவட்ட மக்களுக்காக உதவி கோரி பதாகை

367

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர்கள் கோரிக்கை பதாகையை தாங்கியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், திரையுலகினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

sydeny cricket

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

மைதானத்தில் அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் டெல்டாவை காப்பாற்றுவோம், தமிழ்நாடு விவசாயிகளை காப்பாற்றுவோம் என்ற கோரிக்கை தாங்கிய பதாகைகளை ஏந்திருந்தனர். ராஜபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.